இளவரசர் ஹரி- மேகன் தம்பதியின் பிள்ளைகளுக்கு உரிய பட்டங்களை அளிக்க இறுதியில் மன்னர் சார்லஸ் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை வைத்துள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய ராஜகுடும்பத்தில் தற்போது செயற்படாத உறுப்பினர்கள் வரிசையில் இருப்பவர் இளவரசர் ஹரி. இதனால் மன்னருக்கான முக்கிய ஆலோசகர் வட்டத்தில் இருந்தும் அவர் நீக்கப்படும் சூழலில் உள்ளார். இது மட்டுமின்றி, பேரிடியாக அவரது பிள்ளைகள் இருவருக்கும் இளவரசர் மற்றும் இளவரசி பட்டமும் அளிக்கப்படாது என்ற தகவல் அரண்மனை வட்டாரத்திலிருந்து வெளியானது. […]
