இளம் பெண்களை மீட்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த அல்லிசன் ரெனோ என்பவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் 16 முதல் 18 வயது வரை உள்ள இளம் பெண்களை ஆப்கானில் இருந்து 60 வயதான அல்லிசன் ரெனோ என்ற அமெரிக்காவைச் சேர்ந்தவர் காப்பாற்றியுள்ளார். அதாவது “ஆப்கானிஸ்தானில் ரோபோட்டிக்ஸ் குழுவில் 10 இளம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். […]
