திருத்தணி அருகே கர்ப்பிணி இளம்பெண் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் என்ற காலனியில் வசித்துவந்த மணிமேகலை(24) என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பகுதியில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்குமார் என்பவரை மணிமேகலை காதலித்து வந்ததாகவும் அதனால் அவர் கர்ப்பம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மணிமேகலையை […]
