பீகார் மாநிலத்தில் பாட்னாவில் உள்ள சிபாரா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளம் பெண்ணை சுட்டுவிட்டு தப்பி சென்றார். அதனால் காயமடைந்த அந்த மாணவி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரம், […]
