பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜசேகருக்கு பிரீத்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகரும், அவரது தாய் சகுந்தலாவும் இணைந்து கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரீத்தாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
