தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேலுக்கு பபிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயது மற்றும் 5 மாதம் என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 2-வது பிரசவத்திற்காக தூத்துக்குடியில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்ற பபிதாவை சக்திவேல் பார்க்க சென்றுள்ளார். அதன் பிறகு 5 மாதமாகியும் அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு பேசவில்லை. வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் […]
