கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபலட்சுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 22-ஆம் தேதி லட்சுமிக்கு சுக பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைகளை மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என டாக்டர்கள் […]
