திருமணமான 4 மாதங்களிலேயே மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 23ஆம் தேதி ஹரியானாவை சேர்ந்த யோகேஷ் என்ற வாலிபர் இளம்பெண் ஒருவருடன் தங்கியுள்ளார். இதனையடுத்து யோகேஷ் இளம்பெண்ணை அறையில் வைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி விடுதியின் கண்காணிப்பு கேமராவில் […]
