நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி பிரேம் நகரில் சுரேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த சரளா(20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சுரேஷ் தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு […]
