கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவதாக கர்ப்பமான அமுதா வயிற்றில் இருப்பது ஆணா? பெண்ணா? என தெரிந்து கொள்ள விரும்பினார். இது தொடர்பாக பரிசோதனை செய்ய கடந்த 17-ஆம் தேதி அமுதா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அசகளத்தூரில் இருக்கும் தனியார் மருந்தகத்திற்கு சென்றுள்ளார். […]
