மதுரை மாவட்டம் மணப்பட்டி கிராமத்தில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு ராஜா என்ற வாலிபரை காதலித்துள்ளார். இதில் அழகுராஜா ரம்யாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் ரம்யா வீட்டார் அழகுராஜாவை மாப்பிள்ளை கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது அழகுராஜா ரம்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ரம்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். […]
