இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்த மருத்துவரான ராபின்சன் என்ற மகன் உள்ளார். இவர் விளாத்திகுளத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இந்நிலையில் விளாத்திகுளம் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அவருடைய ஆண் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் ராபின்சன் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது போன்று நடித்து இளம்பெண்ணுக்கு […]
