வாட்ஸ் அப் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரட்டுபுதூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் வாலிபர் ஒருவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்களை அனுப்பி வந்துள்ளார். அந்த வாலிபரை இளம்பெண் எச்சரித்தும் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதனால் இளம்பெண் தரப்பில் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
