நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த அவரின் அறிவிப்பு அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும். ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. […]
