தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வேலூர் டூ திருப்பதிக்கு இலவச வாகன சேவையை தொடங்கி வைத்துள்ளார். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொதுமக்களுக்கு திருப்பதி கோவிலுக்கு செல்ல இலவச பேருந்து சேவையை நேற்று முன்தினம் தொடங்கி வைத்துள்ளார். இந்த பேருந்து சேவையை பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலிருந்து எம்.எல்.ஏ நந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், திருப்பதி திருமலை […]
