தமிழகத்தில் பொங்கலுக்கு முன்பு ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் இலவச மின் இணைப்பு செயல்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதில் தற்போது 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன்பு மின் […]
