ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என்பது வதந்தி என அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு ஐந்து மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொரு மீட்டருக்கும் 100 யூனிக் மின்சாரம் இலவசம் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மின் இணைப்பு, எவ்வளவு பயன்பாடு உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. […]
