காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். தமிழக அரசு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது. இந்நிலையில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே சின்ன போரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். விலையில்லா மடிகணினி வழங்கப்படாததை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பெற்றோருடன் அரசு பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து […]
