தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டம் இன்று அமலுக்கு வந்தது. மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என அரசு நகரப் […]
