சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஹெச்.பி. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மகளிருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்க முடிவெடுத்துள்ளது. மார்ச் 8ம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள ஹெச்.பி பெட்ரோல் பங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் தினமான மார்ச் 8ம் தேதியன்று மட்டும் முதலில் வாகனம் ஓட்டி வரும் 100 பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வீதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. […]
