திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரலில் நிறுத்தப்பட்டிருந்த நேரடி இலவச தரிசன டோக்கன்கள், மீண்டும் நேற்று முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க இலவச […]
