தமிழகத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் நோக்கத்தில் சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில் மண்டல மகர விளக்கு பூஜை 41 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் நோக்கத்தில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த […]
