கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் வைத்து 18 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 3034 மாணவர்களுக்கு 1 கோடியே 49,000 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் […]
