2021-22 நிதியாண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில், PMUY திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி LPG இணைப்புக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு கோடி கூடுதல் PMUY இணைப்புகள் (உஜ்வாலா 2.0 இன் கீழ்) வழங்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டத்தில் சேர்க்கப்படாத, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, டெபாஸிட் இல்லாமல் LPG இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்போடு, உஜ்வாலா 2.0 முதல் ரீஃபில் மற்றும் ஹாட் பிளேட்டை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கும். […]
