அதிமுக வெற்றி பெற்றால் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடு கட்டி தரப்படும் என்று முதல்வர்அறிவித்துள்ளார் . தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட போது, […]
