அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின் போது இலவச வாக்குறுதிகளை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு தடைவிதிக்க கோரியும் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவற்றிற்கு எதிராக ஆம்ஆத்மி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பேசியதாவது, இது ஒரு விவகாரம் இல்லை என ஒருவரும் கூறவில்லை. இதுஒரு தீவிர விவகாரம் ஆகும். […]
