Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்தவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு….!! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை…!!

இலங்கையைச் சேர்ந்த பிரந்திய குமார் என்பவர் பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தொழிற்சாலையில் இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இஸ்லாமிய வாசகங்கள் அடங்கிய டிஎல்பி கட்சியின் போஸ்டர் ஒன்றைச் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இஸ்லாமிய மதத்தை அவமானப்படுத்தியதாக கூறி டி எல் பி கட்சியினர் உட்பட தொழிற்சாலையில் இருந்தவர்கள் அவரை கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துள்ளனர். அதோடு அவருடைய உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் . இந்த […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் அவசர உதவி….!! இலங்கை நிதி மந்திரி கோரிக்கை…!!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இலங்கை கடும் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் சுமையில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் நிலைமையை சீராக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உடனான இலங்கையின் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கையின் நிதி மந்திரி அலி சப்ரி தலைமையிலான அதிகாரிகள் வாஷிங்டன் சென்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் அண்டை நாடான […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் நிதி நெருக்கடி…. பெட்ரோல் ஒரு லிட்டர் 338 ரூபாய்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

நிதி நெருக்கடியால் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 338 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி ஒவ்வொரு நாளும் கடுமையாக மோசமடைந்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்தடை, தொழிற்சாலைகள் அடைப்பு, பணியாளர்கள் பணி நிறுத்தம் என்று இயல்பு நிலை கடுமையாக  பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 84 ரூபாய் அதிகரித்து 338 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நட்பு நாட்டுக்கு…. அனைத்து உதவிகளும் செய்வோம்…. மத்திய நிதித்துறை அமைச்சர் உறுதி….!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் 12 மணி நேரம் மின்இணைப்புகள் துண்டிக்கப்படுகிறது. மேலும் பன்னாட்டு பண நிதியத்தில் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் உள்ள இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொருளாதாரச் சிக்கலுக்கு தீர்வு காணும் முயற்சியில் சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் இலங்கை மேலும் கடன் உதவி கேட்பதற்கு அந்நாட்டு நிதியமைச்சர் அலி […]

Categories
உலக செய்திகள்

ரசாயன உரங்களுக்கு தடை விதித்தது தவறு….வருத்தம் தெரிவித்த அதிபர்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடி வருகிறது. இலங்கையில் தற்போது வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடி வருகிறது. இதையடுத்து 12 மணி நேர மின்வெட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்சே […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. பிரபல நாட்டில் நிலவும் பதற்றம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அந்நாட்டின் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் அதிபர் மாளிகை முற்றுகை போராட்டமும் தீவிரமடைந்து வருவதால் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மாளிகை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை அரசு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அரசு தரப்பில், நாடு முழுவதும் 7 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான உயர்மட்ட […]

Categories
உலக செய்திகள்

ராஜபட்சவுக்கு நெருக்கடி… போராட்டத்தில் முழுமையாக ஈடுபட இருக்கிறோம்…. தேவாலயங்கள் அறிவிப்பு…!!!!!!

இலங்கையில் ராஜபட்சவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தேவாலயங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பிரதமர் மஹிந்த ராஜபட்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், விவகாரத்தை கோத்தபய ராஜபட்ச  தலைமையிலான அரசு கையாளும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவை பதவி விலகியது. மேலும் கூட்டணி கட்சியை சேர்ந்த 41 எம்பிக்கள் ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: “நான் பதவி விலக மாட்டேன்”…. அதிபர் அதிரடி அறிவிப்பு…..!!!!

இலங்கை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அதிபர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதவி முடியும் வரை நான் பதவியில் இருப்பேன் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் மற்றும் முன்னாள் மந்திரிகளுக்கு இடையிலான சந்திப்பு நிறைவடைந்தது. இலங்கை அதிபர் மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் இன்று மாலை புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்க் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு…. பங்குச்சந்தை மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பங்குச்சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக திருப்பிச் செலுத்தப்போவதில்லை என்று இலங்கை சென்ற வாரம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பங்குச்சந்தையானது தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இந்நிலையில் இன்று முதல் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இலங்கை பங்கு […]

Categories
உலகசெய்திகள்

“வன்முறை ஏற்பட்டால் நாங்கள் களம் இறங்குவோம்”…. இலங்கை இராணுவம் அறிவிப்பு….!!!!!

இலங்கையில் அரசிற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தலையிடமாட்டோம் என அந்த நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அரசு பயன்படுத்தக் கூடும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பிறப்பிக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளை ராணுவம் பின்பற்ற வேண்டாம் என முன்னாள் ராணுவ தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: ஒரு வாரத்திற்கு பங்குச்சந்தை மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!!

இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு பங்குச்சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக திருப்பிச் செலுத்தப்போவதில்லை என்று இலங்கை சென்ற வாரம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பங்குச்சந்தையானது தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இந்நிலையில் நாளை முதல் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இலங்கை பங்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் போராட்டம்… வரும் 18 ஆம் தேதிக்கு பின் எடுக்கப்போகும் முடிவு?…. வெளியான தகவல்….!!!!!

இலங்கை நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னாள் அமைச்சர்களுடன் முக்கியமான ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது. அதிபர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும், புதிய அமைச்சரவை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழ்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வலியுறுத்தி காலி முகத்திடலில் ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் […]

Categories
உலகசெய்திகள்

இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்…. இலங்கையை சென்றடையும் 37,500 டன் பெட்ரோல்…!!!!!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா வழங்கும் கடன் உதவி திட்டத்தின் கீழ் 37, 500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை சென்றடைய உள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் தகவலை சிலோன் பெட்ரோலியம் கழகம் அறிவித்துள்ளது. இந்த 37,500 தன் பெட்ரோல் அடுத்த 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக இலங்கைக்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பொருளாதார நெருக்கடி எதிரொலி…. கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடல்…..!!!!!!

இலங்கை நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பும் , தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு இருக்கிறது. மேலும் எரிப்பொருள் பற்றாக்குறை, பல மணிநேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று தீவு முழுதும் இயல்புநிலை முடங்கி உள்ளது. இதன் காரணமாக  நாடு முழுதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு […]

Categories
உலக செய்திகள்

ஷாக் நியூஸ்…! ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 171ஆ…? எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையத்தின் முக்கிய கணக்கு…. வெளியான தகவல்…!!

பாகிஸ்தானின் புதிய அதிபரான ஷெபாஸ்ஸின் அரசு இம்ரான்கானின் ஆட்சியில் வழங்கப்பட்ட பெட்ரோல், டீசலுக்கான மானியத்தை நிறுத்தினால் அவற்றுக்கான விலை மேலும் அதிகரிக்கும் என்று எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் கணக்குப் போட்டுள்ளது. பாகிஸ்தானின் புதிய அதிபராக ஷெபாஷ் சமீபத்தில் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் எண்ணை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய கணக்கு ஒன்றை போட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த இம்ரான்கானின் ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் […]

Categories
உலக செய்திகள்

டிரைவர்களே… “பெட்ரோல், டீசலுக்கு” உச்சவரம்பு நிர்ணயம்…. கடுமையாக நிலவும் பொருளாதார நெருக்கடி…. வெளியான தகவல்….!!

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார தட்டுப்பாட்டை கருத்தில் வைத்து அந்நாட்டுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய கழகம் வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாததால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் வைத்துக்கொண்டு இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய கழகம் வாகனங்கள் பெட்ரோல், […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: முன்னாள் கிரிக்கெட் வீரர் உண்ணாவிரத போராட்டம்…. வெளியான தகவல்…..!!!!

இலங்கை நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தாமிகா பிரசாத் 24 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கொழும்புநகரில் அதிபர் அலுவலகம் உள்ள காலே பேஸ் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்விடத்தில் அவர் போராட்டத்தை தொடங்கினார். இப்போதைய பொருளாதார சிக்கலிலிருந்து விடுபடவும், சென்ற 2019ஆம் வருடம் ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்பே கடந்த வாரம் இதற்காக அவர் கண்டன ஊர்வலம் நடத்தினார் […]

Categories
உலக செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடி…. இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை….!!!!

இந்தியா பொருளாதார நெருக்கடியால் திணறி வரும் இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகிறது. மேலும் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளையும் அளித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை, சமையல் எரிவாயுவை இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பொதுத்துறை எரிவாயு நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சிஇஓ திஷேரா ஜெயஷிங் கடிதம் எழுதியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும், எரிவாயு தொழிலில் மிகப் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் போராட்டம்…. ஆதரவு தெரிவித்த பிரதமரின் மகன்…. பெரும் பரபரப்பு…..!!!!!

இலங்கை நாட்டு அதிபர் கோத்தபய வெளிப்படையாக செயல்படவில்லை எனவும் மக்களின் போராட்டத்துக்கு தான் ஆதரவு தருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சே கூறினார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு தான் காரணம் எனவும் அதனால் அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரியும் கொழும்புவில் கடந்த 7 நாட்களாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் மகனும் இளைஞர் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இன்று தமிழ் புத்தாண்டு…. வாழ்த்துக்கள் கூறிய இலங்கை அதிபர் மற்றும் பிரதமர்…!!!

இலங்கை அதிபர் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறார். தமிழ் புத்தாண்டிற்காக இலங்கை அதிபரான கோட்டபாய ராஜபக்சே வாழ்த்துச் செய்தி தெரிவித்திருக்கிறார். அதில் புது வருட தினத்தில் சந்தோசத்தை பாதுகாத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார். இதேபோன்று புதிதாக பிறக்கும் புது வருடத்தில் நல்ல எண்ணங்களை அடைவதை இலக்காக  கொள்வது தான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்று அந்நாட்டின் பிரதமரான  மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

Categories
தேசிய செய்திகள்

தவறான பொருளாதார கொள்கை… இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கு வரும்…. ப.சிதம்பரம் எச்சரிக்கை…!!!!!

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடிய அபாயம் உள்ளதாக ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் தவறான பொருளாதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கிறேன். மேலும் வந்துவிட்டது எனக் கூறவில்லை. ஆனால் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என நான் எச்சரிக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

இலங்கை: விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு…. கடும் சிரமத்தில் மக்கள்…..!!!!

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போன்று விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி அதிகரித்துள்ளது. இலங்கை நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாட முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருள் மற்றும் மண்ணெண்ணை வாங்க பிளாஸ்டிக் கேன்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். அதுமட்டுமல்லாமல் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விண்ணை முட்டும் அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. அத்துடன் விலை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிதி நெருக்கடிக்கு மத்தியில் ‘பீஸ்ட்’…. திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்….!!!

இலங்கையின் கொழும்பு நகரத்தில் இருக்கும் 50க்கும் அதிகமான திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் மக்கள் ஒவ்வொரு நாளும் அதிக இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களுக்கு கூட கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையிலும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்து கொண்டிருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் போராட்டம்…. பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிரதமர்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை வாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சென்ற 9ஆம் தேதி தொடங்கிய தெருமுனை போராட்டம், நேற்று 4-வது நாளாக நீடித்தது. அதிபர் அலுவலகம் எதிரில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் 5-வது நாளை இலங்கை அரசுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்…. இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த மருத்துவர்கள்…!!!

இலங்கையில் உயிர் காக்கக்கூடிய அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் மயக்க மருந்து, மருந்து பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மருத்துவர்களும், செவிலியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், மக்களின் அடிப்படை உரிமை மருத்துவம் என்றும் இலங்கை மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் என்றும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

Categories
உலக செய்திகள்

கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்பு கிடையாது… இலங்கையின் முன்னாள் அமைச்சர் கூறிய தகவல்…!!!

இலங்கை நாட்டின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, கச்சத்தீவை இந்தியாவிடம்  மீண்டும் ஒப்படைக்க வாய்ப்புகள் கிடையாது என்று கூறியிருக்கிறார். இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், ஒவ்வொரு நாளும் அந்நாட்டு மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதோடு, பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தினசரி பல மணி நேரங்களாக மின்தடை ஏற்பட்டு மக்களை மேலும் அவதிக்குள்ளாக்குகிறது.  எனவே, மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

இந்தியா அனுப்பிய 11,000 மெட்ரிக் டன் அரிசி…. இலங்கையை அடைந்ததாக தகவல்…!!!

இந்தியா அனுப்பிய 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி நெருக்கடியால் இலங்கை மக்கள் ஒவ்வொரு நாளும் அதிக இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். பெட்ரோல் டீசல் உணவு பொருட்களின் தட்டுப்பாடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களாக மின்தடை என்று மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். இதனிடையே இந்தியா, இலங்கைக்கு தேவையான எரிபொருள், உணவுப்பொருட்கள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. அதன்படி, சுமார் 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இந்தியாவால் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் புத்தாண்டு: இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா…. 11 ஆயிரம் டன் அரிசி வழங்கல்….!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு 11 ஆயிரம் டன் அரிசியை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இன்று சிங்கள புத்தாண்டும் நாளை தமிழ்ப் புத்தாண்டும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை இலங்கை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக கப்பல் மூலம் அரிசியை கொழும்பிற்கு அனுப்பி வைத்தது. இலங்கைக்கு 7,500 கோடி கடன் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் இதன் கீழ் இதுவரை 40 ஆயிரம் டன் அரிசியை வழங்கி இருக்கிறது இந்தியா. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல இசைக் கலைஞர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்பில் உள்ள நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராப் பாடகரான ஷிராஸ் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட போது திடீரென உயிரிழந்துள்ளார். அதாவது போராட்ட களத்தில் பாடிக்கொண்டிருந்த ஷிராஸ் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி…. கடனை இப்போது செலுத்த இயலாது…. இலங்கை அரசு கோரிக்கை..!!!

இலங்கை அரசு பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால் தற்போது கடனை திரும்ப செலுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாட்டு மக்கள் தினந்தோறும் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். கடுமையாக உயர்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலை,  பெட்ரோல், டீசல் மற்றும் உணவு பொருட்கள் தட்டுப்பாடு, தினசரி பல மணி நேரங்கள் மின்தடை போன்றவற்றால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு, நிதி நெருக்கடியை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் வலுக்கும் போராட்டம்…..ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது…..!!!!!

இலங்கையில்  பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடன், விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்கள் பற்றாக்குறை பல மணி நேரம் மின்சாரம் வினியோகம் போன்றவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வலுத்தாலும் அதிபர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் […]

Categories
உலக செய்திகள்

இடைக்கால அரசு அமைக்க…. தீவிரம் காட்டும் அதிபர்…. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை….!!!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டின் அதிபர், பிரதமர் தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர். இதையடுத்து அதிபரால் 4 மந்திரிகளை மட்டுமே நியமனம் செய்ய முடிந்தது. இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் வகையில் அனைத்துக் கட்சி இணைந்த இடைக்கால அரசு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி….! ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு….!!!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 2 லட்சமாக அதிகரித்துள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு இலங்கையில் மோசமாக சரிந்த காரணத்தினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதோடு விலையும், […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி…. திணறும் மக்கள்…. தொடரும் போராட்டம்…. வெளியான தகவல்…..!!!!!

அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாக சரிந்ததால் இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியுள்ளது. அத்துடன் உணவு மற்றும் எரிப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இலங்கை அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இலங்கை நாட்டில் ஒரு சவரன் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையை 226 நபர்கள் மண்டியிட வைத்துள்ளனர்…. ஆவேசமாக பேசிய சங்கக்காரா…..!!!!!

2.1 கோடி மக்கள் வாழக்கூடிய நாட்டை 226 நபர்கள் மண்டியிட வைத்துள்ளனர் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்காரா தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் நேரலையில் ஹெஷான் டி சில்வாவுடன் நடைபெற்ற நேர்காணில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்காரா கூறியதாவது “நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வகுத்துள்ளனர் மற்றும் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர். எனினும் அதனைவிட மோசமாக அவர்கள் தங்களது சொந்தகுடிமக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. […]

Categories
அரசியல்

உதவி செய்பவர்களை இலங்கை அவமதிக்கிறது….. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!

இலங்கைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை பிணையில் விடுவிக்க தலா ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “சிங்களக் கடற்படையினரால் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை பிணையில் விடுவிக்க, அவர்கள் தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பிரதமரை நீக்க வேண்டும்…. வலியுறுத்திய எம்.பி.க்கள்…. வெளியான தகவல்…..!!!!

இலங்கை நாட்டில் அதிபா் அலுவலத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை அமைக்குமாறு அதிபா் கோத்தபயராஜபட்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பின்னடைவில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய பட்டியலையும் அந்நாட்டு அதிபரிடம் எம்பிக்கள் சமா்ப்பித்துள்ளனா். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மகிந்த ராஜபட்ச அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை கூட்டணிக் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு உலக தலைவர்களின் ஆதரவு வேண்டும்… இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள்…!!!

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா உலக தலைவர்கள் தங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே, மக்கள் அதிபரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா தெரிவித்திருப்பதாவது, இது இயற்கையான ஆர்ப்பாட்டம். Colombo: It's an organic uprising. We'll use all methods available through constitutional procedures to achieve the expectations of the […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிடம் கூடுதல் கடனுதவி கேட்க உள்ளோம்…!!” இலங்கை நிதி மந்திரி பேட்டி…!!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வு, பல மணி நேர மின்வெட்டு என மக்கள் அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். அதோடு அரசியல் குழப்பங்களும் இலங்கையில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை இதனால் மக்கள் கொந்தளித்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்தியா கடனுதவி பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்கள் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….!! உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கை…. தமிழகத்துக்கு அகதிகளாக வரும் மக்கள்….!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் படகு மூலம் 2 குழந்தைகள் உட்பட 19 இலங்கை தமிழர்கள் அகதிகளா தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டில் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் நெருக்கடியில் இருந்து தப்பிக்க முன்னதாகவே தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து வந்த 20 பேரை அகதிகளாக முகாம்களில் தங்க வைத்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் 41 எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்த அதிபர்…. எதற்காக தெரியுமா?… வெளியான தகவல்…..!!!!!

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225-ஆக இருக்கிறது. இவற்றில் ஆளும்  இலங்கை பொதுஜன பெருமுனை முன்னணி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 145 ஆகும். இதில் ஆளும்கட்சியை சேர்ந்த 41 உறுப்பினர்கள் தனித்து செயல்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில் தனித்து செயல்படுவதாக அறிவித்த 41 உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிபர் கோட்டாபயராஜபக்ச அழைப்பு விடுத்து இருக்கிறார். இடைக்கால அரசு அமைப்பதற்கு 41 பேரும் கோரிய சூழ்நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: சீன முதலீடு அவ்வளவு பெருசா இல்லை….. பேட்டி கொடுத்த முன்னாள் பிரதமர்…..!!!!!

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிப்பும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு இருக்கிறது. அத்துடன் எரிப்பொருள் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று இலங்கை முழுதும் இயல்புநிலை முடங்கிஉள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், இலங்கை அரசு பொருளாதாரம் மீது கவனம் செலுத்தவில்லை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நிலவும் கடும் தட்டுப்பாடு…. அதிகாலை 3 மணி முதலே…. பொதுமக்கள் வேதனை…!!!!!!

இலங்கையில் சமையல் கேஸ் கிடைக்காததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இலங்கையில் சமையல் கேஸ்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அங்கு இருக்கின்ற மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை  3:00 மணி முதலே மக்கள் சமையல் கேஸ் வாங்க காத்திருக்கின்றார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டுமே சமையல் கேஸ் கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சிலர் நீண்ட தூரம் பயணம் செய்து அதிக விலை கொடுத்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நிதி நெருக்கடி…. சமாளிக்க வழி சொல்லும்… மத்திய வங்கியின் புதிய கவர்னர்…!!!

இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று மத்திய வங்கியின் புதிய கவர்னர் கூறியிருக்கிறார். இலங்கையில் நிதி நெருக்கடி ஒவ்வொரு நாளும் வெகுவாக அதிகரித்து வருகிறது. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு, பல மணி நேரங்கள் மின்தடை, பணியாளர்கள் வேலை நிறுத்தம், தொழில்சாலைகள் அடைப்பு என்று நாடு முழுக்க இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தலால் வீரசிங்கே, நாட்டில் தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நெருக்கடியை சரிசெய்ய…. 3 பில்லியன் டாலர் தேவைப்படுது…. அலி சப்ரி பேச்சு…..!!!!

இலங்கையை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்க 6 மாதங்களில் 3 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்திநிறுவனத்திடம் அவர் பேசியதாவது “இப்போதைய சூழலில் நிதி திரட்டுவது கடினமான பணி என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக 1 பில்லியன் டாலர் தொகைக்கு மேல் உள்ள பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசை எதிர்க்கும் மக்களின் உரிமையை தாங்கள் மதிப்பதாக கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி…. தமிழகத்திற்கு குவியப்போகும் ஜவுளி ஆர்டர்….!!!

இலங்கையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால் இலங்கைக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் தமிழகத்திற்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமான நிலைமைக்கு செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு பல ஆயிரம் கோடி ஜவுளி ஆர்டர்கள் குவிய வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சரிக்கு சமமாக 4% ரெட்மேட் துணிகளை தயாரித்து வருகின்றன. இலங்கையிடம் உள்ள அந்த நான்கு சதவீத ஆர்டர்கள் தற்போது […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, இலங்கை இரண்டும் இரட்டைச் சகோதரர்கள்…. கோபால் பாக்லே சொன்னது என்ன?…..!!!!!

இந்தியா மற்றும் இலங்கை இரட்டைச் சகோதரர்கள் என இலங்கைக்கான இந்தியதூதர் கோபால் பாக்லே தெரிவித்து உள்ளார். கொழும்புவில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நடந்த இஃப்தார் விருந்தில் கோபால் பாக்லே பங்கேற்று இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் வாழும் முஸ்லிம் தலைவர்கள் பல பேரும் இந்த விருந்தில் பங்கேற்று இருந்தனர். விருந்தினர்களில் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி, வங்கதேசத்துக்கான இலங்கை தூதர் தாரேக் மொஹம்மது அரிஃபுல் இஸ்லாம் மற்றும் அமைச்சர்கள், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

அடக்குமுறைக்கு எதிராக அன்பு பரிசளித்த மாணவி…. வெளியான நெகிழ்ச்சி புகைப்படம்….!!!!

நேற்று இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. களனி என்ற பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் கலவர எதிர்ப்பு வாகனத்தை நிறுத்தியதோடு, மாணவர்களை தடுக்கும் விதமாக சாலைத் தடுப்புகளை வைத்திருந்தனர். இந்த நிலையில் மாணவி ஒருவர் கையில் ஒற்றை ரோஜாவை ஏந்தியபடி காவலர்களிடம் நீட்டினார். ஆனால் காவல்துறையினர் முதலில் யார் அந்த ரோஜாவை வாங்குவது என்பது போல அமைதியாக நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த […]

Categories
உலக செய்திகள்

அலி சப்ரி தான் இலங்கையின் நிதியமைச்சரா…?? ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத அதிபர்…!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக நிலவி வரும் மோசமான அரசியல் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அலி சப்ரி உட்பட நான்கு அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி பதவிப்பிரமானம் செய்த 24 மணி நேரத்தில் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த கையோடு அவர் அளித்த பேட்டியில், தற்காலிகமாகத்தான் தான் பதவியில் பொறுப்பேற்றதாகவும் நிலைமையை சீராக்க விரும்பினால் வேறு […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு…. உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!!

இலங்கையில் இருக்கும் மருத்துவமனைகளில் வரும் நாட்களில் அவசரகால சிகிச்சை வழங்குவதற்கு கூட உரிய மருந்து பொருட்களின்றி அவதிப்படும் நிலை உண்டாகும் என்று தேசிய மருத்துவ கழகம் எச்சரித்திருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் தகுந்த அளவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவுக்கு நாட்டின் மருத்துவ கழகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மருத்துவமனைகளில் தகுந்த மருந்துகளின்றி, ஏற்கனவே வழக்கமாக நடக்கும் […]

Categories

Tech |