மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய படம் பொன்னியின் செல்வன். இப்போது இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்தியா மட்டுமின்றி இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் பொன்னியின் செல்வன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் தலைநகர் கொழும்புவிலுள்ள தியேட்டர் ஒன்றில் அந்நாட்டின் முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான மகிந்த […]
