இந்தியக் கடற்படை வீரர்கள் இலங்கை மீனவர்களை தாக்கியதாக கூறப்படும் செய்திகள் பொய் என்று இந்தியத் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது பல காலமாகவே நடந்து வருகிறது. அவ்வப்போது அவர்கள் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது ,அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இதில் திடீர் திருப்பமாக இந்தியக் கடற்படை இலங்கை மீனவர்களை தாக்கி இருப்பதாக […]
