எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் கடந்த மாதம் 28ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து 4 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், நேற்று அவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். […]
