புதுக்கோட்டை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, நேற்று மாலை கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி 23 மீனவர்களையும், அவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் அனைவரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் […]
