இலங்கையின் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அந்நாட்டு அரசு உதவித்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கூட திண்டாட்டமாகிவிட்டது. இந்நிலையில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு ரூபாய் 3,000 முதல் 7,500 வரை பண உதவி வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைக் குறித்து இலங்கையின் வர்த்தகத்துறை மந்திரி ஷெஹான் சேமசிங்க கூறியிருப்பதாவது “நாட்டின் தற்போதைய பொருளாதார […]
