இலங்கை நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் விலைவாசிகள் அனைத்தும் உயர்ந்து மக்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக இந்தியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ருந்து வருகிறார்கள். அந்த வகையில் அந்நாட்டைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக ஆஸ்திரேலிய நாட்டை நோக்கி கப்பலில் சென்று கொண்டிருந்தனர். இந்த கப்பல் பிலிப்பைன்ஸ் கடல் பகுதிக்கு சென்ற போது […]
