இலங்கையில் நிலவிவரும் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கையில் தவித்து வரும் மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள்,உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் […]
