Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளும் இதை கண்டுக்கல..! விதிமுறைகளை மீறிய கடைகள்… மறைமுக விற்பனை அமோகம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கை மீறி பெரும்பாலான இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று அசைவம் சமைப்பது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அசைவ பிரியர்கள் காவல்துறையினரின் கண்களில் படாமல் ஊரடங்கை மீறி இறைச்சி, மீன் கடைகளை தேடி அலைந்துள்ளனர். அதேபோல் பெரம்பலூர் நகர் பகுதியில் இறைச்சி, மீன் கடைகள் விற்பனை மறைமுகமாக அமோகமாக நடைபெற்றுள்ளது. அங்கு இறைச்சி, மீன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இறைச்சி விற்பனைக்கு தடை…. அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சி கடைகளிலும் விற்பனைக்கு அரசு உத்தரவின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். எனவே அரசு உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |