உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும், மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவின் பேரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இறைச்சிக் கடைகளில் மட்டுமே மத நிகழ்வுக்காகவும், வழிபாட்டிற்காகவும் இறைச்சிகள் வெட்டப்பட வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்படாத இடங்களில் விலங்குகள் வெட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது இன்று நடைபெறவுள்ள பக்ரீத் பண்டிகைக்கும் பொருந்தும். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி வியாபாரிகளும் பொதுமக்களும் […]
