வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்தமாத இறுதிக்குள் இதன் முழுபடப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் […]
