சனவரி 13 கிரிகோரியன் ஆண்டின் 13 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 352 (நெட்டாண்டுகளில் 353) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1658 – இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான். 1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் உயிரிழந்தனர். 1815 – கண்டிப் போர்கள்: பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.[1] 1830 – லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ […]
வரலாற்றில் இன்று ஜனவரி 13…!!
