இன்றைய நாள் : ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டு : 117 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 118ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு : 248 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 395 – பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசியாகத் திகழ்ந்தார். 629 – சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார். 711 – தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முசுலிம் படைகள் சிப்ரால்ட்டரில் தரையிறங்கி ஐபீரிய ஊடுருவலை ஆரம்பித்தனர். 1296 – இசுக்காட்லாந்து விடுதலைக்கான முதலாவது போர்: இசுக்காட்லாந்துப் படைகள் டன்பார் சமரில் ஆங்கிலேயர்களால் […]
