அக்டோபர் 6 கிரிகோரியன் ஆண்டு 279 ஆம் நாள். நெட்டாண்டு 280 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 86 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 69 – உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது. கிபி 23 – சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 404 – பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1683 – வில்லியம் பென் தன்னுடன் […]
