சனவரி 17 கிரிகோரியன் ஆண்டின் 17 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 348 (நெட்டாண்டுகளில் 349) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 395 – பேரரசர் முதலாம் தியோடோசியஸ் இறந்ததை அடுத்து, உரோமைப் பேரரசு நிரந்தரமாக கிழக்கு உரோமைப் பேரரசாகவும், மேற்கு உரோமைப் பேரரசாகவும் பிரிந்தன. 1287 – அரகொன் மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். 1362 – ஐரோப்பாவில் பிரித்தானியத் தீவுகள், நெதர்லாந்து, வடக்கு செருமனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 25,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1] 1377 – திருத்தந்தை பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை உரோமுக்கு மாற்றினார். 1524 – இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ பசிபிக் பெருங்கடலுக்கான கடல் வழியைக் காணும் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 17…!!
