மே 1 கிரிகோரியன் ஆண்டின் 121 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 122 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 244 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 305 – தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். 524 – பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார். 1169 – நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது. 1328 – இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. 1576 – திரான்சில்வேனியா இளவரசர் இசுட்டீவன் பாத்தரி, அன்னா […]
வரலாற்றில் இன்று மே 1…!!
