ஆகத்து 12 கிரிகோரியன் ஆண்டின் 224 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 225 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 141 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள். 1099 – முதலாம் சிலுவைப் போர்: சிலுவைப் போர்வீரர்கள் பாத்திமக் கலிபகத்தைத் தோற்கடித்தனர். 1121 – ஜோர்ஜிய இராணுவத்தினர் நான்காம் டேவிட் மன்னர் தலைமையில் செல்யூக்குகளை வென்றனர். 1323 – சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது./ 1492 – கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதல் பயணத்தின் போது கேனரி தீவுகள் வந்தடைந்தார். 1499 – வெனிசியர்களுக்கும் உதுமானியர்யர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது. 1765 – […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 12…!!
