பிரிட்டனின் தீவிர நடவடிக்கைகளினால் கடந்த வாரத்தை விட தற்போது கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் மூன்றாவது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டுவருவதால் கடந்த 7 நாட்களில் பிரிட்டனில் கொரோனா தொற்று 30.6 சதவீதமாக குறைந்தது என்று புள்ளி விவரங்கள் வெளியானது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சராசரியாக 33,552 […]
