திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடி மையத்தில் இறந்தவரின் ஓட்டை யாரோ ஒருவர் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையம், கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் தேர்தலன்று கூடுதலாக ஒரு ஓட்டு வாக்குப்பதிவின் போது பதிவாகியிருந்தது. அதாவது யாரோ ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து போன அம்பேத்கர் என்பவருடைய ஓட்டை பதிவு செய்துள்ளனர். […]
