இறந்ததாக கூறப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் 60வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தென்னந்தோப்பில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து இறந்து கிடந்த நபர் அதே பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணுவாக இருக்கலாம் என காவத்துறையினருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரின் சகோதரரான அர்ஜுனை அழைத்து இறந்து கிடப்பவர் சின்னக்கண்ணு […]
