பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல்நல குறைவால் காலமானார். 1967 ஆம் ஆண்டு பிறந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 53 வயதான இர்பான் கான் லைப் ஆப் பை, லன்ச் பாக்ஸ், ஜிராஸிக் வேர்ல்ட் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர். மேலும் தேசிய விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார். […]
