இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பெண் உள்பட 3 பேரை தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வெங்கரை பகுதியில் பாலமுருகன்(19) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் நடைபெற்ற விழாவில் ஒலிபெருக்கியை சத்தமாக வைத்து தெருவில் ஆட்டம் போட்டுள்ளார். இதனை அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அவரது மனைவி மணிமேகலை மற்றும் ராஜா ஆகியோர் தட்டிகேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முருகேசன், ராஜா ஆகிய […]
