தஞ்சை மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைமேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் ரம்யாசரவணன் (தி.மு.க.) பேசியது, அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடம், கூடுதல் வகுப்பறை கட்டிடம், தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்புகளும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகட்டிடமும் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையருக்கு […]
