கடலூர் அருகே பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த ஐயப்பன் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே சமீபகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் இருவருக்கும் சண்டை அதிகமாகியுள்ளது. இதையடுத்து ஐயப்பனின் தந்தை மகனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சுதா புடவையில் தூக்கில் தொங்கியபடி […]
